6th Standard Tamil Book Term 1 தமிழ்க்கும்மி Solution
தமிழ்த்தேன் > தமிழ்க்கும்மி
நூல்வெளி
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர். இவரின் இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது. TO GET LATEST - SEATGEEK PROMO CODE 2024 - CLICK HERE |
சில பயனுள்ள பக்கங்கள்
I. சொல்லும் பொருளும்
- ஆழிப்பெருக்கு – கடல்கோள்
- மேதினி – உலகம்
- ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
- உள்ளப்பூட்டு – அறிய விரும்பாமை
- மெய் – உண்மை
- வழி – நெறி
- அகற்றும் – விலக்கும்
- மேன்மை – உயர்வு
- அறம் – நற்செயல்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தாய் மொழியில் படித்தால் ________ அடையலாம்
- பன்மை
- மேன்மை
- பொறுமை
- சிறுமை
விடை : மேன்மை
2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ________ சுருங்கிவிட்டது
- மேதினி
- நிலா
- வானம்
- காற்று
விடை : மேதினி
3. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- செந் + தமிழ்
- செம் + தமிழ்
- சென்மை + தமிழ்
- செம்மை + தமிழ்
விடை : செம்மை + தமிழ்
4. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- பொய் + அகற்றும்
- பொய் + கற்றும்
- பொய்ய + கற்றும்
- பொய் + யகற்றும்
விடை : பொய் + அகற்றும்
5. பாட்டு+ இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________
- பாட்டிருக்கும்
- பாட்டுருக்கும்
- பாடிருக்கும்
- பாடியிருக்கும்
விடை : பாட்டிருக்கும்
6. எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________
- எட்டுத்திசை
- எட்டிதிசை
- எட்டுதிசை
- எட்டிஇசை
விடை : எட்டுத்திசை
III. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சாெற்களை எடுத்து எழுதுக.
- காெட்டுங்கடி – கோதையரே
- எட்டுத்திசை – எட்டிடவே,
- ஊழி – ஊற்று
- அறிவு – அழியாமலே
- மெய் – மேதினி
IV. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சாெற்களை எடுத்து எழுதுக.
- காெட்டுங்கடி – எட்டுத்திசை
- ஊழி – ஆழி
- பொய் – மெய்
- கண்டதுவாம் – கொண்டதுவாம்
- பூட்டறுக்கும் – பாட்டிருக்கும்
V. குறுவினா
1. தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
தமிழ் மொழியின் செயல்களாக கவிஞர் கூறுவன, பொய்மை அகற்றி; மனதின் அறியாமையை நீக்கி; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்களைத் தந்து; உயிர் போனற் உண்மை தரும் பாடல்களை தந்து; உயிர் போன்ற உண்மையை ஊட்டி; உயர்ந்த அறத்தை தந்து; உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளை காட்டுவது. |
2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார் |
VI. சிறுவினா
1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன?
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இலக்கண இலக்கியங்களைப் பெற்ற முதுமொழி நம் தமிழ்மொழி. சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை பல இலக்கியங்களை கண்டுள்ளது. அவ்வாறு கண்டிருந்தும் தமிழ்மொழி சிதைந்து விடவில்லை. மாறாக பல மாற்றங்களைக் கண்டு வளர்ந்து உள்ளது. பல மொழிகள் அழிந்த நிலையிலும் தமிழ்மொழி இன்று செம்மொழியாக உலகில் தலைநிமிரந்து நிற்பதனாலேயே கவிஞர் அவ்வாறு கூறிகிறார். |
2. தமிழ்க் கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்துகொண்டவற்றை உம் சொந்த நடையில் தருக.
பல நூறு ஆண்டுகளை கடந்து பல அரிய நூல்களை தந்து அதன்வழி பல அறிவியல் வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கி நிற்கின்றது. இயற்கைச் சீற்றத்தையும் பல் இனங்களின் எதிர்ப்பையும் மீறி அழியாமல் நிலைத்திருக்கின்றன. வாய்மையை அகற்றி மனதின் அறியாமையை நீக்கி; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்களைத் தந்து; உயிர்போன்ற உண்மையை ஊட்டி; உயர்ந்த அறத்தைத் தந்து உலகம் சிறந்த வாழ்வதற்கான வழிகளைக் காட்டி நிற்பது நம் தமிழே என்பத அறிந்து கொண்டோம் |
VII. சிந்தனை வினா
1. தமிழ் மொழி எவ்வாறு அறியாமையை அகற்றும்?
ஈராயிரம் ஆண்டுகளாக பல இலக்கியங்களை கண்டுள்ள நம் தமிழ்மொழி அதில் சங்க இலக்கியத்தில், அக் வாழ்வு, புற வாழ்வு கருத்துகளை தெள்ளத் தெளிவாகப் புலவர்கள் எடுத்தியம்பியள்ளனர். சங்கம் மருவிய இலக்கியத்தில். அறநெறிக் கருத்துக்களைப் பல் புலவர்கள் எடுத்தியம்பியுள்ளனர். காப்பியங்களில். கதை மாந்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது? என்று வாழ்வியல் நெறிகளை கற்பிக்கின்றனர். இவைகளை வைத்துப் பார்க்கும்போது தமிழ்வைத்து பாரக்கும்போது தமிழ்மொழி அறியாமையை அகற்று என்பது உறுதியே. |
கூடுதல் வினாக்கள்
A. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. “மாணிக்கம்” என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- பெருஞ்சித்திரனார்
- கவிமணி
விடை : பெருஞ்சித்திரனார்
2. “பாவலரேறு” என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படும் கவிஞர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- பெருஞ்சித்திரனார்
- கவிமணி
விடை : பெருஞ்சித்திரனார்
3. நும் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடலைப் பாடியவர்
- பாரதியார்
- கண்ணதாசன்
- பெருஞ்சித்திரனார்
- கவிமணி
விடை : பெருஞ்சித்திரனார்
4. நும் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடல் இடம்பெறும் நூல்
- கனிச்சாறு
- கொய்யாக்கனி
- பாவியக்கொத்து
- நூறாசிரியம்
விடை : கனிச்சாறு
5. “தென்மொழி. தமிழ்ச்சிட்டு. தமிழ் நிலம்” ஆகிய இதழ்களை நடத்தியவர்
- கல்யாண சுந்தரனார்
- கண்ணதாசன்
- பெருஞ்சித்திரனார்
- சுரதா
விடை : பெருஞ்சித்திரனார்
7. திசைகள் ________ செந்தமிழின் புகழ் பரவ வேண்டும்.
- இரண்டிலும்
- எட்டிலும்
- நான்கிலும்
- பத்த்திலும்
விடை : நான்கிலும்
8. ________ சிறந்து வாழ்வதற்கான வழிகாட்டு முறைகள் காெண்டது தமிழ்.
- உலகம்
- ஊர்
- தெரு
- நாடு
விடை : உலகம்
B. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாலவர் ________
விடை : பெருஞ்சித்திரனார்
விடை : செந்தமிழின்
3. ________ பல நூறு ஆண்டுகளைக் கணடது
விடை : தமிழ்மொழி
4. பொய்யாமை அகற்றும் மொழி ________
விடை : தமிழ்மொழி
5. உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி ________
விடை : தமிழ்மொழி
C. பொருத்துக
ஆழி | அ. உலகம் |
மேதினி | ஆ. கடல் |
மேன்மை | இ. நீண்டதொருகாலப்பகுதி |
ஊழி | ஈ. உயர்வு |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 -இ |
D. பிரித்து எழுதுக
- காெட்டுங்கடி = காெட்டுங்கள் + அடி
- வழிகாட்டிருக்கும் = வழிகாட்டு + இருக்கும்
- செந்தமிழ் = செம்மை + தமிழ்
- ஊற்றெனும் = ஊற்று + எனும்
- பாட்டிருக்கும் = பாட்டு + இருக்கும்
E. சேர்த்து எழுதுக
- இளமை + காேதையர் = இளங்காேதையர்
- பூட்டு + அறுக்கும் = பூட்டறுக்கும்
- அறம் + மேன்மை = அறமேன்மை
- பல + நூறு = பலநூறு
- ஊற்று + எனும் = ஊற்றெனும்
E. குறு வினா
1. பெருஞ்சித்திரனார் இயற்றியுள்ள நூல்களை எழுதுக.
கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
2. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் யாவை?
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.
0 Comments