Ticker

6/recent/ticker-posts

6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 2 - சிலப்பதிகாரம் கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 2 Silapathikaram Solution

6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 2 - சிலப்பதிகாரம் கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 2 Silapathikaram Solution

பாடம் 2.1 - சிலப்பதிகாரம்

இயற்கை > சிலப்பதிகாரம்

நூல்வெளி

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.

இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.

இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.

I. சொல்லும் பொருளும்

  1. திங்கள் – நிலவு
  2. கொங்கு – மகரந்தம்
  3. அலர் – மலர்தல்
  4. திகிரி – ஆணைச்சக்கரம்
  5. பொற்கோட்டு – பொன்மயமான சிகரத்தில்
  6. மேரு – இமயமலை
  7. நாமநீர் – அச்சம் தரும் கடல்
  8. அளி – கருணை

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கழுத்தில் சூடுவது ________

  1. தார்
  2. கணையாழி
  3. தண்டை
  4. மேகலை

விடை : தார்

2. கதிரவனின் மற்றொரு பெயர் ________

  1. புதன்
  2. ஞாயிறு
  3. சந்திரன்
  4. செவ்வாய்

விடை : ஞாயிறு

3. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. வெண் + குடை
  2. வெண்மை + குடை
  3. வெம் +குடை
  4. வெம்மை + குடை

விடை : வெண்மை + குடை

4. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. பொன் + கோட்டு
  2. பொற் + கோட்டு
  3. பொண் + கோட்டு
  4. பொற்கோ + இட்டு

விடை : பொன் + கோட்டு

5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

  1. கொங்குஅலர்
  2. கொங்அலர்
  3. கொங்கலர்
  4. கொங்குலர்

விடை : கொங்கலர்

6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

  1. அவன்அளிபோல்
  2. அவனளிபோல்
  3. அவன்வளிபோல்
  4. அவனாளிபோல்

விடை : அவனளிபோல்

III. நயம் அறிக

1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

  • போற்றுதும் – போன்று
  • மேரு – மேல்
  • திகரி – திரிதலான்
  • அவன் – அளிபோல்

2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக

  • திங்களை – கொங்கு
  • போற்றுத் – பொற்கோட்டு
  • அலர்தார்ச் – உலகு
  • மாமழை – நாம

IV. குறுவினா

1. சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

சிலப்பதிகாரக் காப்பியம் வான்நிலா, கதிரவன், வான்மழை போன்றவற்றை வாழ்த்தி தொடங்குகிறது

2. இயற்கை போற்றத்தக்கது ஏன்?

மனிதன் இயங்குவது, வாழ்வதும் இயற்கையினால்தான் அவ்வியற்கை இல்லாமல் மனிதனால் இயங்க முடியாது, அதுவே உயிரினங்களுக்கு மணி முடி அதனால் தான் இயற்கையைப் போற்றுகிறோம்

V. சிந்தனை வினா

இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

பண்டைய மக்கள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தனர். இயற்கைப் புலன்களுக்கு ஏற்ப வாழும் இடங்களை அமைத்து, அவ்வவ்நிலத்திற்கு ஏற்ற தொழிலைச் செய்து வந்தனர்.

ஐவகை நிலங்களை ஐவகைத் திணைகளைக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அமைத்து அதற்கேற்ற உரிபப்பொருள்களையும் உடையவர்களாய் இருந்தனர்.

தொல்காப்பியம் உயிர்களை ஆறு வகையாகக் குறிப்பிடுகிறது. எல்லா உயிரினங்களும் மதிக்கப்டுவதைப் பல்வேறு இலக்கியங்களும் பேசுகின்றன.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்  வாடினேன் என்று வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்த காரணத்தால், இயற்கையை நன்கு அறிந்திருந்தனர்.

மனிதன் இயங்குவது வாழ்நாள் முழுவதும் இயற்கையில்தான், அவ்வியற்கை இல்லாமல் மனிதனால் இயங்க முடியாது.

இயற்கையே உயிரினங்களுக்கு மணிமுடி. அதனால் தான் மனிதர்கள் இயற்கையைப் போற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர்

  1. சீத்தலைசாத்தனார்
  2. இளங்கோவடிகள்
  3. ஜெயங்கொண்டார்
  4. ஒட்டக்கூத்தர்

விடை : இளங்கோவடிகள்

2. இளங்கோவடிகள் _________ மரபைச் சேர்ந்தவர்.

  1. சேர
  2. சோழ
  3. பாண்டிய
  4. பல்லவ

விடை : சேர

3. சென்னி _________க் குறிக்கும் பெயர்.

  1. சோழனை
  2. பாண்டிய
  3. சேரரை
  4. பல்லவனைக்

விடை : சோழனை

4. திகிரி என்பது குறிக்கும் பொருள் 

  1. நிலவு
  2. மகரந்தம்
  3. மலர்தல்
  4. சக்கரம்

விடை : சக்கரம்

5. நாம என்னும் சாெல் உயர்த்தும் பொருள்

  1. அச்சம்
  2. கருணை
  3. மலர்தல்
  4. சக்கரம்

விடை : அச்சம்

6. வானிலிருந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. வானில் + லிருந்து
  2. வானில் + இருந்து
  3. வானிலில் + இருந்து
  4. வானிலில் + லிருந்து

விடை : வானில் + இருந்து

7. மாமழை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. மா + மழை
  2. மாம் + மழை
  3. மா + அழை
  4. மாம் + அழை

விடை : மா + மழை

7. மேல் + நின்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. மேனின்று
  2. மேல்நின்று
  3. மேன்நின்று
  4. மேன்இன்று

விடை : மா + மழை

7. அம்+கண் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. அம்கண்
  2. அங்கண்
  3. அகக்கண்
  4. அங்கண்

விடை : மா + மழை

IV. குறுவினா

1. சிலப்பதிகாரம் போற்றப்படும் விதத்தை எழுதுக.

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பியம் ஆகும்.

இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

2. சிலப்பதிகாரம் எவ்வாறு போற்றப்படுகிறது?

ஆசரியர் – இளங்கோவடிகள்.

பெற்றோர் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – நற்சோணை

மரபு – சேர மரபு

காலம் – கி.பி. 2-ஆம் நூற்றாண்டு

படைப்பு – சிலப்பதிகாரம்.

தமையன் – சேரன் செங்குட்டுவன்

Post a Comment

0 Comments