பாடம் 3.2 அறிவியலால் ஆள்வோம்
அறிவியல், தொழில்நுட்பம் > அறிவியலால் ஆள்வோம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அவன் எப்போதும் உண்மையையே _________
- உரைக்கின்றான்
- உழைக்கின்றான்
- உறைகின்றான்
- உரைகின்றான்
விடை : உரைக்கின்றான்
2. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
- ஆழமான + கடல்
- ஆழ் + கடல்
- ஆழ + கடல்
- ஆழம் + கடல்
விடை : ஆழம் + கடல்
3. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
- விண் + வளி
- விண் + வெளி
- வின் + ஒளி
- விண் + வொளி
விடை : விண் + வெளி
4. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________
- நீலம்வான்
- நீளம்வான்
- நீலவான்
- நீலவ்வான்
விடை : நீலவான்
5. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________
- இல்லாதுஇயங்கும்
- இல்லாஇயங்கும்
- இல்லாதியங்கும்
- இல்லதியங்கும்
விடை : இல்லாதியங்கும்
II. நயம் அறிக.
1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
|
2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
|
3. பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
|
III. சிறுவினா
1. செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது?
செய்தித் தொடர்பில் சிறந்து விளங்குவதற்கும். இயற்கை வளங்களையும் புயல், மழை ஆகியவற்றையும் கண்டறிந்து கூறவும் செயற்கைக்கோள் பயன்படுகிறது
2. நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?
நாளைய மனிதனோ விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான். அங்கு சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான்.
IV. சிந்தனை வினா
1. எவற்றுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்பது பற்றிச் சிந்தித்து எழுதுக.
|
2. இதுவரை எத்தனை கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அவை யாவை?
இதுவரை ஒன்பது கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை
புதன் | வெள்ளி | பூமி |
செவ்வாய் | வியாழன் | சனி |
யுரேனஸ் | நெப்டியூன் |
3. இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக் கோள் யாது?
இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக் கோள் சந்திராயன் ஆகும்.
கூடுதல் வினாக்கள்
I. பிரித்து எழுதுக
- செயற்கைக்கோள் = செயற்கை + கோள்
- எந்திரமனிதன் = எந்திரம் + மனிதன்
- உள்ளங்கை = உள் + அம் + கை
- இணையவலை = இணையம் + வலை
- இல்லாதியங்கும் = இல்லாது + இயங்கும்
II. எதிர்ச்சொல் தருக
- மேலே x கீழே
- இயற்கை x செயற்கை
III. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. வானத்தில் செலுத்தப்படுவது _________
விடை : செயற்கைக்கோள்கள்
2. எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படுவது _________
விடை : எந்திர மனிதன்
3. _________ உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான்.
விடை : இணைய வலையின்
4. நாளைய மனிதன் விண்ணிலுள்ள _________ எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான்
விடை : கோள்களில்
வானை அளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தில் கண்டுதெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம். – பாரதியார் |
0 Comments