6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 2 – முதலெழுத்தும், சார்பெழுத்தும் கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 2 Muthalethum Sarpeluthum

Table of Contents

பாடம் 2.5 முதலெழுத்தும், சார்பெழுத்தும்

இயற்கை > முதலெழுத்தும், சார்பெழுத்தும்

I. சிறுவினா

1. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?

உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.

பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.

2. சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை?

சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும்.

  • உயிர்மெய்
  • ஆய்தம்
  • உயிரளபெடை
  • ஒற்றளபெடை
  • குற்றியலிகரம்
  • குற்றியலுகரம்
  • ஐகாரக்குறுக்கம்
  • ஒளகாரக்குறுக்கம்
  • மகரக்குறுக்கம்
  • ஆய்தக்குறுக்கம்

3. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?

தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தன க்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது

II. சிந்தனை வினா

1. உயிர்மெய், ஆய்தம் இவை இரண்டும் சார்பு எழுத்துகளாகக் கூறப்படக் காரணம் தருக

உயிர்மெய் எழுத்துகள்

மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின.

முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.

ஆய்த எழுத்து

தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது.

முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்


கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் ________

விடை : சார்பெழுத்துகள்

2. ________ பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன

விடை : முதல் எழுத்துகள்

3. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் ________ சேர்ந்ததாக இருக்கும்.

விடை : மெய்யும் உயிரும்

4. மூன்று புள்ளிகளை உடைய ________ தனித்த வடிவம் பெற்றது.

விடை : ஆய்த எழுத்து

5. ________ தனித்து இயங்காது.

விடை : ஆய்த எழுத்து

6. உயிர் எழுத்துகள் ________

விடை : 12

7. மெய்யெழுத்துகள் ________

விடை : 18

8. உயிர்மெய் எழுத்துக்கள் ________

விடை : 216

9. சார்பு + எழுத்து என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது ________

விடை : சார்பெழுத்து

10. குறுமை + இயல் + உகரம் என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது ________

விடை : குற்றியலிகரம்

11. ஐகாரக்குறுக்கம் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ________

விடை : ஐகாரம் + குறுக்கம்

12. உயிரளபெடை என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ________

விடை : உயிர் + அளபடை

IV. சிறுவினா

1. எழுத்துகளின் வகைகளை கூறுக.

எழுத்துகள் முதல் எழுத்து, சார்பு எழுத்து என இரு வகைப்படும்

2. உயிர்மெய் எழுத்துக்கள் எவ்வாறு சார்பெழுத்தினுள் அடங்கும்?

உயிர்மெய் எழுத்துக்கள் முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்

3. உயிர்மெய் எழுத்துக்களின் வரி வடிவம் எதனை ஒத்திருக்கும்?

உயிர்மெய் எழுத்துக்களின் வரிவடிவம் மெய்யெழுத்துக்களை ஒத்திருக்கும்.

4. உயிர்மெய் எழுத்துக்களின் ஒலிக்கும் கால அளவு எதனை ஒத்திருக்கும்?

உயிர்மெய் எழுத்துக்களின் ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்துக்களை ஒத்திருக்கும்.

5. ஆய்த எழுத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?

முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை

6. ஆய்த எழுத்து எவ்வாறு சார்பெழுத்து ஆகும்?

முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.

V. குறுவினா

1. உயிர்மெய் எழுத்துக்கள் குறிப்பு வரைக

  • மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
  • உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
  • வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
  • முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.

2. ஆய்தம் எழுத்து – குறிப்பு வரைக

  • மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
  • முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
  • நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.
  • தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  • தனித்து இயங்காது.
  • முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்


மொழியை ஆள்வோம்!

I. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக

இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். 

பனிபடர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த பரிசு. 

இயற்கையின் அழகை ரசித்தால் மட்டும் போதாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். 

மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

1. எதனை இயற்கை என்கிறோம்?

இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்

2. இப்பத்தியில் உள்ள இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?

  • பனிபடர்ந்த நீலமலைகள்
  • பாடித்திரியும் பறவைகள்
  • தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள்
  • சலசலக்கும் ஓடைகள்
  • ஆர்ப்பரித்து வீழும் அருவிகள்
  • நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல்
  • கண்சிமிட்டும் விண்மீன்கள்
  • தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா

இவையெல்லாம் இயற்கையை வருணிக்கும் சொற்கள்.

3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?

நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம்.

மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது.

புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக?

“இயற்கையின் கொடைகள்”

II. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் _______ என்று பெயர். (பறவை / பரவை)

விடை : பரவை

2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக _______ ஆற்றினார். (உரை / உறை)

விடை : உரை

3. முத்து தம் _______ காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)

விடை : பணி

4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை _______ (அலைத்தாள் /அழைத்தாள்).

விடை : அழைத்தாள்

III. திரட்டுக.

கடல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக.

நேமி வேலம் ஆழி
முந்நீர் வாரணம் பெளவம்
வேலம் ஆர்கலி பரவை
ஆர்கலி உததி அத்தி
திரை நரலை சமுத்திரம்

IV. தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.

1. பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.

விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.

2. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார்.

விடை: கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார்.

3. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.

விடை: இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.


V. பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.

1. புள் என்பதன் வேறு பெயர்

வை

2. பறவைகள் இடம்பெயர்தல்

சை போ ல்

3. சரணாலயம் என்பதன் வேறு பெயர்

பு லி ம்

VI. வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.

1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.

விடை: சிலப்பதிகாரம் என்றும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்

2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.

விடை: பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது

3. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்

விடை: சாண்டியாகோ மிகப் பெரிய மீனைப் பிடித்தார்

4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை

விடை: இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி

VII. கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.

மு த் மி ழ் கா
ப் பை னி மே ணி
ல் நி வு நி
து லை ர்
லை மே ணி ம்
செ ங் கா ல் நா ரை

1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று _______

விடை: மணிமேகலை

2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை _______

விடை : முப்பது

3. திங்கள் என்பதன் பொருள் _______

விடை: நிலவு

4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை _______

விடை: செங்கல் நாரை

5. பாரதியார் _______ வேண்டும் என்று பாடுகிறார்.

விடை: காணி நிலம்

6. ஆய்த எழுத்தின் வேறு பெயர் _______

விடை: தனிநிலை


VIII. கவிதை படைக்க.

கீழே காணப்படும் “மழை” பற்றிய கவிதையைச் சொந்தத் தொடர்களால் நிரப்புக.

வானில் இருந்து வந்திடும்

மனதில் மகிழ்ச்சி தந்திடும்

என்றும் இளமை சிந்திடும்

எல்லா மணமும் நிறைந்திடும்

எங்கும் வளமை பொழிந்திடும்

IX. கலைச்சொல் அறிவோம்

  1. கண்டம் - Continent
  2. தட்பவெப்பநிலை – Climate
  3. வானிலை – Weather
  4. வலசை  – Migration
  5. புகலிடம்  – Sanctuary
  6. புவிஈர்ப்புப்புலம் - Gravitational Fiel