பாடம் 2.2. காணி நிலம்
இயற்கை > காணி நிலம்
|
I. சொல்லும் பொருளும்
- காணி – நில அளவைக் குறிக்கும் சொல்
- மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
- சித்தம் – உள்ளம்.
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் _________
- ஏரி
- கேணி
- குளம்
- ஆறு
விடை : கேணி
2. சித்தம் என்பதன் பொருள் _________
- உள்ளம்
- மணம்
- குணம்
- வனம்
விடை : உள்ளம்
3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் _________
- அடுக்குகள்
- கூரை
- சாளரம்
- வாயில்
விடை : அடுக்குகள்
4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________
- நன் + மாடங்கள்
- நற் + மாடங்கள்
- நன்மை + மாடங்கள்
- நல் + மாடங்கள்
விடை : நன்மை + மாடங்கள்
5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________
- நிலம் + இடையே
- நிலத்தின் + இடையே
- நிலத்து + இடையே
- நிலத் + திடையே
விடை : நிலத்தின் + இடையே
6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
- முத்துசுடர்
- முச்சுடர்
- முத்துடர்
- முத்துச்சுடர்
விடை : முத்துச்சுடர்
7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______
- நிலாஒளி
- நிலஒளி
- நிலவொளி
- நிலவுஒளி
விடை : நிலவொளி
III. பொருத்துக.
1. முத்துச்சுடர்போல | அ. தென்றல் |
2. தூய நிறத்தில் | ஆ. நிலாஒளி |
3. சித்தம் மகிழ்ந்திட | இ. மாடங்கள் |
விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ |
IV. நயம் அறிக.
1. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
- முத்து – முன்பு
- பத்து – பக்கத்திலே
- அங்கு – அந்த
- நிறத்தினதாய் – நிலத்திடையே
2. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை ச் சொற்களை எடுத்து எழுதுக.
- காணி – கேணி
- தென்றல் – நன்றாய்
- பன்னிரண்டு – தென்னைமரம்
- பத்து – சித்தம்
V. குறுவினா
1. காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?
காணி அளவு நிலம் வேண்டும் அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும். அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கு இருக்க வேண்டும். இளநீரும், கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவெளி வீச வேண்டும். காதுக்கு இனிய குரலின் குரேலாசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும் என்று பாரதியார் வேண்டுகிறார் |
2. பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.
பாரதியார் ஒர் இயற்கை கவிஞர் ஆவார். அவருடைய பாடல்களில் அதிகம் இயற்கை வர்ணனைகளே இடம் பெற்றிருக்கும் “நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் காக்கை குருவி எங்கள் கூட்டம்”… என்று பல பாடல்களை பாடி இருப்பதன் மூலம் அவரது இயற்கை வெளிப்பாடு தெரிகிறிது. எந்தவொரு கவிஞனும் இயற்கையோடு ஒன்றிருக்காவிடில் கவிதையை இயற்ற முடியாது. அந்த அளவிற்கு இயற்கை, கவிஞனுக்கு கவிதைகளை அள்ளித் தெளிக்கிறது. அப்படி இருக்கும்போது பாரதிக்கு இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பமானது புதிதல்ல். பாரதியார் தன் வாழ்வை இயற்கையோடே அமைத்து கொண்டார். அவர் தன் பார்வையில் பட்ட அனைத்துப் பொருட்களையும் இயற்கையாகவே கண்ணுற்றார். அது மட்டுமல்லாமல் அவர் பாடாத இயற்கை பொருட்களே இல்லை. இயற்கையோடே வாழவும் கற்றுக் கொண்டார். வாழ்ந்தும் காட்டியவர் அவர் இயற்றிய காணிநிலம் பாடலில் கூட, காணி அளவு நிலம் வேண்டும் அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும். அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கு இருக்க வேண்டும். இளநீரும், கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவெளி வீச வேண்டும். காதுக்கு இனிய குரலின் குரேலாசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும் என்று போல பாரதியார் பாடியுள்ளார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது பாரதியார் இயற்கையின் மீது பராசக்தியிடம் கொண்டுள்ள விருப்பம் வெளியிடப்படுகிறது. |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புதல்
1. பாரதியாரின் இயற்பெயர் ________
- சுப்பிரமணியன்
- சுப்புரத்தினதாசன்
- சுப்பையா
- அரங்கநாதன்
விடை : சுப்பிரமணியன்
2. எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர் ________
- பாரதிதாசன்
- பிச்சமூர்த்தி
- பாரதியார்
- சுரதா
விடை : பாரதியார்
3. பாரதியார் _______, _______, _______ நூல்களை இயற்றி உள்ளார்.
- பாஞ்சாலிசபதம், கண்ணன்பாட்டு, இசையமுது
- பாஞ்சாலிசபதம், இசையமுது, குயில்பாட்டு
- பாஞ்சாலிசபதம், கண்ணன்பாட்டு, குயில்பாட்டு
- இசையமுது, பாஞ்சாலிசபதம், குயில்பாட்டு
விடை : பாஞ்சாலிசபதம், கண்ணன்பாட்டு, குயில்பாட்டு
4. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்
- பாரதிதாசன்
- பிச்சமூர்த்தி
- சுரதா
- பாரதியார்
விடை : பாரதியார்
5. இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
- பாரதியார்
- கண்ணதாசன்
- பிச்சமூர்த்தி
- சுரதா
விடை : பாரதியார்
6. மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்
- கண்ணதாசன்
- கந்தவர்வன்
- பாரதியார்
- வண்ணதாசன்
விடை : பாரதியார்
6. இளமை + தென்றல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- இளமை தென்றல்
- இளமைதென்றல்
- இளந்தென்றல்
- இளம்தென்றல்
விடை : பாரதியார்
II. பொருத்துக
1. தூண் | அ. முத்துச்சுடர் |
2. மாடம் | ஆ. அழகு |
3. நிலா ஒளி | ஆ. தூயநிறம் |
விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ |
0 Comments